பீட்டர்சன் 
செய்திகள்

டி வில்லியர்ஸ் பாராட்டும் இளம் வீரர்

தென்னாப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சனின் பேட்டிங் திறமையைப் பிரபல வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சனின் பேட்டிங் திறமையைப் பிரபல வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் 28 வயது கீகன் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் எடுத்தார். 5-வது டெஸ்டில் விளையாடும் பீட்டர்சன், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு அரை சதங்கள் எடுத்துள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

தனது பேட்டிங் திறமையால் அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ள பீட்டர்சனை பிரபல வீரர் டி வில்லியர்ஸும் பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

சுருக்கமாகச் சொல்வதென்றால் பீட்டர்சனால் சிறப்பாக விளையாட முடியும். உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சுக்கு எதிராக வெளிப்பட்ட அவருடைய நிதானம், திறமை, தொழில்நுட்பத்தால் நான் மிகவும் ஆர்வமடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT