செய்திகள்

தடுப்பூசி: பிரெஞ்சு ஓபனிலும் ஜோகோவிச்சுக்கு சிக்கல்

DIN


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தாத வீரருக்கு விலக்கு அளிக்கப்படாது என பிரான்ஸ் விளையாட்டு அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தது.

கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய அரசு அவருக்கு விசா வழங்க மறுத்தது. இதை எதிர்த்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஜோகோவிச் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.

பிரான்ஸில் உணவகங்கள், திரையரங்குகள், நீண்ட ரயில் பயணங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி மறுக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன. இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுபற்றி விளையாட்டு அமைச்சகம் குறிப்பிடுகையில், "இந்தக் கட்டுப்பாடுகள் விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியைப் பொறுத்தவரை அது மே மாதம் தான் நடைபெறுகிறது. நிலைமை அப்போது மாறலாம். அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால், நிச்சயம் விலக்கு அளிக்கப்படாது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT