செய்திகள்

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்திய மஹாராஜா அணி அறிவிப்பு

ஜனவரி 20 முதல் மஸ்கட், ஓமன் பகுதிகளில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

DIN

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 போட்டிக்கான இந்திய மஹாராஜா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அடுத்ததாகப் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளார் ரவி சாஸ்திரி. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) டி20 போட்டியின் ஆணையராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எல்எல்சி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்திய மஹாராஜா, ஆசிய லயன்ஸ், வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் என அணிகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆசிய லயன்ஸ் அணியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ஜனவரி 20 முதல் மஸ்கட், ஓமன் பகுதிகளில் இப்போட்டி நடைபெறவுள்ளது. மூன்று அணிகளும் இதர அணிகளுடன் தலா இருமுறை மோதும். இறுதிச்சுற்று ஜனவரி 29 அன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டங்கள் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். 

சேவாக் தலைமையில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இந்திய மஹாராஜா அணியின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்திய மஹாராஜா

சேவாக் (கேப்டன்), யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், சஞ்சய் பங்கர், ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா, பத்ரிநாத், நமன் ஓஜா, முனவ் படேல், மன்ப்ரீத் கோனி, நயன் மோங்கியா, ஹேமங் பதானி, வேணுகோபால் ராவ், முகமது கைஃப், ஸ்டூவர்ட் பின்னி. 

ஆசிய லயன்ஸ் அணிக்கு பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக்கும் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணிக்கு மே.இ. தீவுகளின் டேரன் சமியும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

SCROLL FOR NEXT