செய்திகள்

டி காக் அதிரடி சதம்: இந்தியாவுக்கு 288 ரன்கள் இலக்கு

DIN

டி காக்கின் அதிரடி சதத்தால் இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 287 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி ஏற்கெனவே 2-0 என்ற முன்னிலையில் கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில் இருஅணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் கேப்டவுனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

முதலிரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததையடுத்து, இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்குர், வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்குப் பதில் சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சஹார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தென்னாப்பிரிக்க அணியில் தப்ரைஸ் ஷம்ஸிக்குப் பதிலாக டுவெய்ன் பிரிடோரியஸ் சேர்க்கப்பட்டார். 

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டி காக் ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அவர் 130 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் டூசன் தன்பங்கிற்கு அரைசதம் விளாச 49.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 3, பும்ரா, தீபக் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT