செய்திகள்

ரிஸ்வான்: 2021-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டி20 வீரர்

​2021-ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.

DIN


2021-ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 2021-ஐ ஆட்சி செய்திருக்கிறார். 29 ஆட்டங்களில் விளையாடிய ரிஸ்வான் 1,326 ரன்களைக் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 73.66. ஸ்டிரைக் ரேட் 134.89. பேட்டிங் மட்டுமில்லாது கீப்பிங்கிலும் ரிஸ்வான் அசத்தியுள்ளார்.

சிறப்பான ஆட்டத்தின்மூலம் 2021-இன் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார் ரிஸ்வான். அதில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 3-வது இடம் பிடித்தார். 

2021 தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இதன்பிறகு, கராச்சியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 87 ரன்கள் விளாசினார். டி20 உலகக் கோப்பையில் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.   

நிகழாண்டில் ஒரு டி20 உலகக் கோப்பை வரவுள்ள நிலையில், ரிஸ்வான் இதே ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பது பாகிஸ்தானின் விருப்பமாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT