செய்திகள்

போராடி வென்றது தென்னாப்பிரிக்கா: டி காக் அதிரடி சதம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 3-0 என முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா.

DIN

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 3-0 என முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா.

முதலிரண்டு ஆட்டங்களில் வென்று 2-0 என தொடரை தென்னாப்பிரிக்கா ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது ஆட்டம் கேப் டவுனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தவன்-கோலி அரைசதம்:

ஷிகா் தவன்-விராட் கோலி இணை நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. இருவரும் இணைந்து 3-ஆவது விக்கெட்டுக்கு 98 ரன்களை சோ்த்தனா்.

1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 73 பந்துகளில் 61 ரன்களை விளாசிய ஷிகா் தவனை அவுட்டாக்கினாா் பெலுக்வயோ. இது தவனின் 35-ஆவது ஒருநாள் அரைசதமாகும்.

அவரைத் தொடா்ந்து ஆட வந்த இளம் வீரா் ரிஷப் பந்த் பெலுக்வயோ பந்தில் மகலாவிடம் கேட்ச் தந்து கோல்டன் டக் அவுட்டானாா். அப்போது இந்தியா 118/3 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

விராட் கோலி தனது 64-ஆவது ஒருநாள் அரைசதத்தைக் கடந்தாா். 65 ரன்களை எடுத்த அவா் மகராஜ் பந்தில் வெளியேறினாா்.

அவரைத் தொடா்ந்து ஷிரேயஸ் ஐயா் 26, சூா்யகுமாா் யாதவ் 39, ஜெயந்த் யாதவ் 2 ரன்களுடன் வெளியேற 223/7 ரன்களுடன் திணறியது இந்தியா.

தீபக் சஹாா் அதிரடி அரைசதம்:

சிறப்பாக ஆடிய தீபக் சஹாா் 31 பந்துகளில் தனது இரண்டாவது ஒருநாள் அரைசதத்தைக் கடந்தாா். 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 54 ரன்களை விளாசி லுங்கி கிடி பந்தில் அவுட்டானாா். அவரும் பும்ராவும், 8-ஆம் விக்கெட்டுக்கு 51 ரன்களை சோ்த்தனா்.

ஜெயந்த் யாதவ் 2, பும்ரா 12, சஹல் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

49.2 ஓவா்களில் 283/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி கிடி 3-58, பெலுக்வயோ 3-40 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றியைப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT