ரிஷப் பந்த் 
செய்திகள்

17 வருட தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

நேற்றைய டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த் 17 வருட தோனியின் சாதனையை முறியடித்து சாதனைப் படைத்துள்ளார். 

DIN

நேற்றைய டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த் 17 வருட தோனியின் சாதனையை முறியடித்து சாதனைப் படைத்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதமடித்தார். இதற்கு முன்னர் இந்தியாவின் விக்கெட் கீப்பர்களில் மகேந்திர சிங் தோனி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 93பந்தில் சதமடித்து முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும்  இங்கிலாந்து மண்ணில் 2 சதமடித்த முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் சாதனைப் படைத்துள்ளார். 

ரிஷப் பந்த் 146 ரன்களுக்கு ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அணி ஒரு நாள் ஆட்ட முடிவில் 338 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்துள்ளது. ஜடேஜா 83 ரன்களுடனும் ஷமி ரன்னேதும் எடுக்காமலும் முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT