செய்திகள்

உலக செஸ் சாம்பியன்: கார்ல்சனுடன் மோதவுள்ள வீரர் இவர்தான்!

கேண்டிடேட்ஸ் போட்டியை வென்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளார் இயன் நிபோம்நிஷி.

DIN

கேண்டிடேட்ஸ் போட்டியை வென்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளார் இயன் நிபோம்நிஷி.

ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் கேண்டிடேட்ஸ் போட்டியை மீண்டும் வென்றுள்ளார் ரஷியாவைச் சேர்ந்த இயன் நிபோம்நிஷி. 8.5 புள்ளிகளுடன் கேண்டிடேட்ஸ் போட்டியை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சனுடன் மீண்டும் மோத அவர் தகுதியடைந்துள்ளார்.  

கடந்த டிசம்பர் மாதம் நடப்பு உலக செஸ் சாம்பியன் கார்ல்சன் - இயன் நிபோம்நிஷி ஆகியோருக்கிடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபையில் நடைபெற்றது. 2020-ல் நடக்கவேண்டிய இப்போட்டி கரோனா காரணமாகக் கடந்த வருட இறுதியில் தான் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 7.5-3.5 என கார்ல்சன் வெற்றி பெற்று மீண்டும் உலக சாம்பியன் ஆனார். 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 4 சுற்றுகளில் வெற்றி பெற்ற கார்ல்சன், இதர ஆட்டங்களை டிரா செய்து 11-வது சுற்றின் முடிவிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார். 

இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் பங்குபெற கார்ல்சன் மறுத்தால், இறுதிச்சுற்று ஆட்டம் இயன் நிபோம்நிஷி மற்றும் கேண்டிடேட்ஸ் போட்டியில் 2-ம் இடத்தைப் பிடிக்கவுள்ள வீரர் (ஹிகாரு நாகமுரா அல்லது டிங் லிரென்) இடையே நடைபெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT