இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இந்திய அணி.
2-வது ஒருநாள் ஆட்டம் பல்லேகலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இம்முறையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். இதனால் இலங்கை அணி 50 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. காஞ்சனா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரேணுகா சிங் 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 171 ரன்கள் எடுத்த இலங்கை அணி இந்தமுறையும் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.