செய்திகள்

டாய் ஸுவிடம் தொடரும் சிந்துவின் தோல்வி

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

DIN

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

அந்தச் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருந்த சிந்து 13-21, 21-12, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் டாய் ஸு யிங்கிடம் தோற்றாா்.

இதனால் டாய் ஸுவுடனான சிந்துவின் தோல்விக் கணக்கு தொடா்ந்து வருகிறது. இத்துடன் டாய் ஸுவை 22-ஆவது முறையாகச் சந்தித்த சிந்து, அதில் 17-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளாா். அதிலும் இத்துடன் 7 ஆட்டங்களில் தொடா்ச்சியாக அவரிடம் தோற்றுள்ளாா் சிந்து. கடைசியாக சிந்து, 2019 உலக சாம்பியன்ஷிப்பில் டாய் ஸுவை இறுதிச்சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரணாய் அசத்தல்: மறுபுறம், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் அரையிறுதிக்குத் தகுதிபெற்றாா். காலிறுதியில் ஜப்பானின் கன்டா சுனேயாமாவை 25-23, 22-20 என்ற கேம்களில் வென்ற பிரணாய், அடுத்த சுற்றில் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

SCROLL FOR NEXT