செய்திகள்

இலங்கை இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. 

2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில், இந்த ஆட்டத்தை இலங்கை கைப்பற்றியதால் தொடர் சமனில் முடிந்தது. இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துகொண்டன. 

முன்னதாக, கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 145*, மார்னஸ் லபுசான் 104 ரன்கள் விளாசினர். பிரபாத் ஜெயசூரியா 6 விக்கெட்டுகள் சாய்த்தார். 

பின்னர் ஆடிய இலங்கை, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் சேர்த்திருந்தது. 4-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை தினேஷ் சண்டிமல் 118, ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்களுடன் தொடங்கினர். இதில் மெண்டிஸ் 29 ரன்களுக்கு வெளியேற, தொடர்ந்து மஹீஷ் தீக்ஷனா 10, பிராத் ஜெயசூரியா 0, காசன் ரஜிதா 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

181 ஓவர்களில் 554 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது இலங்கையின் முதல் இன்னிங்ஸ். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சண்டிமல், 16 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 206 ரன்கள் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலிய பெüலிங்கில் மிட்செல் ஸ்டார்க் 4, மிட்செல் ஸ்வெப்சன் 3, நேதன் லயன் 2, பேட் கம்மின்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினர். 

பிறகு 194 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, 41 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேவிட் வார்னர் 24, உஸ்மான் கவாஜா 29, மார்னஸ் லபுசான் 32, ஸ்டீவ் ஸ்மித் 0, டிராவிஸ் ஹெட் 5, கேமரூன் கிரீன் 23, மிட்செல் ஸ்டார்க் 0, கேப்டன் பேட் கம்மின்ஸ் 16, நேதன் லயன் 5, மிட்செல் ஸ்வெப்சன் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இலங்கை பெüலிங்கில் பிரபாத் ஜெயசூரியா 6, மஹீஷ் தீக்ஷனா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT