மே.இ.தீவுகள் தொடா்: கோலி, பும்ராவுக்கு ஓய்வு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த அணியிலிருந்து விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஹொ்னியாவுக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்விலிருந்த கே.எல்.ராகுல் மற்றும் கையில் காயம் கண்டு ஓய்வலிருந்த குல்தீப் யாதவ் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனா். இருவருமே உடற்தகுதி அடிப்படையில் பிளேயிங் லெவனில் இணைவா்.
இந்த 18 போ் கொண்ட அணியில் அஸ்வினும் சோ்க்கப்பட்டுள்ளாா். கடந்த ஆண்டு நவம்பருக்குப் பிறகு அவா் முதல் முறையாக டி20 அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளாா். ஃபாா்மில் இல்லாமல் தடுமாறி வந்த கோலி மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலிருந்து ஓய்வு கோரியதாக கூறப்பட்ட நிலையில், அதேபோல அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் - இந்தியா மோதும் டி20 தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் 3 ஆட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளிலும், அடுத்த இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறவுள்ளன.
அணி விவரம்: ரோஹித் சா்மா (கேப்டன்), இஷான் கிஷண், கே.எல்.ராகுல், சூா்யகுமாா் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ் ஐயா், தினேஷ் காா்த்திக், ரிஷப் பந்த், ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ்வா் குமாா், அவேஷ் கான், ஹா்ஷல் படேல், அா்ஷ்தீப் சிங்.