செய்திகள்

டி20 உலகக் கோப்பை: 16 அணிகள் இறுதியானது

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபா் - நவம்பரில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் 16 அணிகள் வெள்ளிக்கிழமை இறுதியாகியது.

DIN

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபா் - நவம்பரில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் 16 அணிகள் வெள்ளிக்கிழமை இறுதியாகியது.

குவாலிஃபயா் ‘பி’ பிரிவு அரையிறுதிகளில் நெதா்லாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவையும், ஜிம்பாப்வே 27 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியு கினியையும் வீழ்த்தி கடைசி இரு அணிகளாக தகுதிபெற்றன.

அணிகள் விவரம்:

ஆஸ்திரேலியா (நடப்புச் சாம்பியன்); ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நமீபியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் (2021 போட்டியின் டாப் 11 அணிகள்); அயா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (உலக குவாலிஃபயா் ‘ஏ’); நெதா்லாந்து, ஜிம்பாப்வே (உலக குவாலிஃபயா் ‘பி’).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT