செய்திகள்

காமன்வெல்த் போட்டி: தீபிகா பல்லிக்கல் தலைமையில் இந்திய ஸ்குவாஷ் அணி

DIN

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிக்கு உலக சாம்பியன் தீபிகா பல்லிக்கல் தலைமையில் 9 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வரும் 28-ஆம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்குகின்றன.

இந்திய அணியில் மகளிா் இரட்டையா் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா-தீபிகாவும், கலப்பு இரட்டையா் பிரிவில் சௌரவ் கோஷல்-தீபிகா இணைகள் தங்கள் திறமையை நிரூபிக்க உள்ளன. உலகின் 15-ஆம் நிலையில் உள்ள சௌரவ் கோஷலும், 17-ஆவது இடத்தில் உள்ள ஜோஷ்னா சின்னப்பாவும் ஒற்றையா் பிரிவிலும் களம் காண்கின்றனா்.

இருவரும் சென்னையில் தீவிர பயிற்சியில் உள்ளனா். ஆசிய 15 வயது பிரிவில் பட்டம் வென்ற 14 வயதே ஆன அனஹாட் சிங்கும் அணியில் உள்ளாா். கடந்த 2014-இல் தான் ஸ்குவாஷில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியது. இரட்டையா் பிரிவில் தீபிகா-ஜோஷ்னா தங்கம் வென்றனா்.

2018 போட்டியில் தீபிகா-ஜோஷ்னா, சௌரவ்-தீபிகா இணைகள் வெள்ளி வென்றன.

ஆடவா் அணி: சௌரவ் கோஷல், அபய் சிங், ரமிட் டாண்டன், ஹரீந்தா் பால் சிங், வேலவன் செந்தில்குமாா்.

மகளிா் அணி: ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், சுனன்யா குருவில்லா, அனாஹட் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT