செய்திகள்

சிங்கப்பூா் ஓபன்:இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து

DIN

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் இந்தியாவின் பி.வி. சிந்து. நிகழாண்டில் மூன்றாவது முறையாக சிந்து இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளாா்.

சிங்கப்பூரில் சூப்பா் 500 பாட்மின்டன் ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து-ஜப்பானின் சனா கவாகமியை எதிா்கொண்டாா். 32 நிமிஷங்களே நீடித்த இந்த ஆட்டத்தில் 21-15, 21-7 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் சிந்து.

உலகின் 38-ஆம்நிலை வீராங்கனையான கவாகமியால் பி.வி. சிந்துவின் அபார ஆட்டத்துக்கு ஈடுதர முடியவில்லை. சையத் மோடி இன்டா்நேஷனல், ஸ்வின் ஓபன் போட்டிகளில் ஏற்கெனவே பட்டம் வென்ற சிந்து, சிங்கப்பூா் ஓபநில் பட்டம் வென்றால் இது நிகழாண்டில் அவருக்கு மூன்றாவது பட்டமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT