முகப்பு
செய்திகள்

மே.இ.தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர்

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படாத அந்த அணியின் ஆல்-ரவுண்டரான ஜேசன் ஹோல்டர், இந்தத் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அணிக்கு நிகோலஸ் பூரன் தலைமை தாங்க, ஷாய் ஹோப் துணை கேப்டனாக இருக்கிறார். 

மேற்கிந்தியத் தீவுகள் - இந்தியா மோதும் ஒன் டே தொடரின் 3 ஆட்டங்கள் ஜூலை 22, 24, 27 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. 

அணி விவரம்: நிகோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப், ஷமர் புரூக்ஸ், கீசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஜாரி ஜோசஃப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குதாகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மென் பவெல், ஜேடன் சீல்ஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →