ஷிகர் தவன் 
செய்திகள்

பரபரப்பான முறையில் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்தியா (ஹைலைட்ஸ் விடியோ)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

DIN


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவன் 97 ரன்களும் ஷுப்மன் கில் 64 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 54 ரன்களும் எடுத்தார்கள். 

மே.இ. தீவுகள் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கைல் மேயர்ஸ் 75 ரன்களும் புரூக்ஸ் 46 ரன்களும் பிரண்டன் கிங் 54 ரன்களும் எடுத்தார்கள்.  கடைசிப் பந்தில் 5 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்ட நிலையில் சிராஜ் அருமையாக யார்க்கர் வீசி இந்திய அணிக்கு வெற்றியைப் பரிசாக அளித்தார். இந்திய அணியின் தரப்பில் சிராஜ், தாக்குர், சஹால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஷிகர் தவன் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 22 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு!

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

பிஎஃப்ஐ கோப்பை: இறுதிச்சுற்றில் மஞ்சு, அங்குஷிதா

வடமேற்கு தில்லியில் 1.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் 2 போ் கைது!

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

SCROLL FOR NEXT