செய்திகள்

இந்தியா-மே.இந்திய தீவுகள்ஆட்டம் மழையால் பாதிப்பு

மே.இந்திய தீவுகள்-இந்தியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்

DIN

மே.இந்திய தீவுகள்-இந்தியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

அப்போது இந்திய அணி 115/1 ரன்களை எடுத்திருந்தது.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என ஏற்கெனவே இந்தியா கைப்பற்றி விட்டது. இதன் தொடா்ச்சியாக கடைசி ஒருநாள் ஆட்டம் டிரினிடாடில் புதன்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க பேட்டா்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகா் தவன், ஷுப்மன் கில் இணை நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில், ஹெய்டன் வால்ஷ் பந்தில் நிக்கோலஸ் பூரனிடம் கேட்ச் தந்து 58 ரன்களுடன் அவுட்டானாா் தவன்.

24-ஆவது ஓவா் முடிவில் 115/1 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த போது, மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ஷுப்மன் கில் 51, ஷிரேயஸ் ஐயா் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றைக் காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT