ஸ்ரீதரன் ஸ்ரீராம் (கோப்புப் படம்) 
செய்திகள்

ஆஸி. அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து விலகிய தமிழக வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் விலகியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் விலகியுள்ளார்.

கடந்த ஆறு வருடங்களாக ஆஸி. அணியில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார் தமிழக முன்னாள் வீரர் எஸ். ஸ்ரீராம். இந்திய அணிக்காக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தற்போது ஆஸி. அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் வெட்டோரி தேர்வாகியுள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ஆஸி. அணியிலிருந்து ஸ்ரீராம் விலகியுள்ளார். ஐபிஎல் போட்டியின் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவில் ஸ்ரீராம் உள்ளார்.

ஆஸி. அணியில் ஸ்ரீராம் பணியாற்றிய காலக்கட்டத்தில் ஆடம் ஸாம்பா, அஷ்டன் அகர் ஆகியோர் திறமையான சுழற்பந்துவீச்சாளர்களாகப் புகழ் பெற்றார்கள். மேக்ஸ்வெல், டி20 ஆட்டங்களில் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதிலும் ஸ்ரீராமின் பங்களிப்பு உண்டு. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு : வனத்துறை எச்சரிக்கை!

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்! எப்போது? எவ்வளவு?

சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்! | PMK

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறை! போட்டியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இரண்டாம் யூனிட் இயக்குநராக பணியாற்றுவேன்... ராஜமௌலியை ஆச்சரியப்படுத்திய ஜேம்ஸ் கேமரூன்!

SCROLL FOR NEXT