செய்திகள்

இவ்வளவு ரன்கள் குவிப்போம் என எதிர்பார்க்கவில்லை: ரோகித் சர்மா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 190 ரன்கள் குவிப்போம் என எதிர்பார்க்கவில்லை என இந்திய அணியின் கேப்டன்  ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 190 ரன்கள் குவிப்போம் என எதிர்பார்க்கவில்லை என இந்திய அணியின் கேப்டன்  ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று (ஜூலை 29) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நாங்கள் 190 ரன்கள் குவிப்போம் என எதிர்பார்க்கவில்லை என்றார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி 16வது ஓவரின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதனால் அணியின் ஸ்கோர்  அதிகரிக்க வாய்ப்பு இருப்பது போன்று தெரியவில்லை. இருப்பினும்,  ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரோகித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்தியின் கடைசி நேர அதிரடி ஆட்டம் இந்தியா 190 ரன்கள் குவிக்க பெரிதும் உதவியது. அதிரடியாக ஆடிய அவர் 19 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.

இது குறித்து போட்டி முடிவடைந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: “ எங்களுக்கு ஆட்டம் கடுமையாக இருக்கப் போகிறது எனத் தெரிந்தது. ஆனால், இறுதியில் ஆட்டத்தினை ஒரு அணியாக முடித்த விதம் சிறப்பாக அமைந்தது. நாங்கள் முதல் 10 ஓவர்களில் விளையாடியதைப் பார்த்தபோது 190 ரன்கள் குவிப்போம் என நினைக்கவில்லை. ஆனால், இறுதியில் சிறப்பாக அணியின் வீரர்கள் செயல்பட்டார்கள். அதன் காரணத்தினாலேயே 190 ரன்கள் குவிக்க முடிந்தது.”  என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

SCROLL FOR NEXT