படம் : டிவிட்டர் | சிராஜ் 
செய்திகள்

டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்படுவேன் : முகமது சிராஜ்

கோவிட் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

DIN

கோவிட் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கோவிட் காரணமாக இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி  தள்ளி வைக்கப்பட்டன. ஏற்கனவே இந்தியா 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜுலை 1-5 நாட்களில் கடைசி டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெறவிருக்கிறது. 

“இந்த வருடம் ஐபிஎல் எனக்கு சரியாக அமையவில்லை. கடைசி இரண்டு வருடம் எனது கிராப் உயர்ந்துக்கொண்டுதான் வருகிறது. இந்த வருடம் எனக்கு ஒழுங்காக அமையவில்லையானாலும் நான் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். எனது திறமை மற்றும் எனது பலமான பந்து வீசும் நுணுக்கங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். 

இங்கிலாந்தில் டுயூக்ஸ் பந்து உபயோகிப்பார்கள். எனக்கு டுயூக்ஸ் பந்தில் பந்து வீசுவது பிடிக்கும். அதற்கு ஆவலாக உள்ளேன். நாங்கள் ஏற்கனவே இந்த தொடரில் 2-1 என முன்னணியில் இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனது வீட்டிற்கு அருகிலே இருக்கும் மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன். டி20யில் இருந்து டெஸ்ட்க்கு மாறுவது பெரிய மாற்றம்.  நீண்ட நேரம் பந்து வீச வேண்டும். தொடர்ந்து பயிற்சி எடுத்து வருவதால் மீண்டும் டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடுவேன்” என முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT