செய்திகள்

வீரர்களின் மனநிலையை புரிந்துக் கொள்கிறாரா ரோகித் சர்மா?

DIN

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீரர்களின் மனநிலைய புரிந்து அதற்கேற்ப அறிவுரை வழங்குகிறார் என முகமது சிராஜ் கூறியுள்ளார். 

ஐபிஎல் 2022இல் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் கடைசி இடம் பிடித்தது. அவரது கேப்டன்சி மீதும் கேள்விகள் எழுந்தது. ஆனால் அவர்தான் ஐபிஎல் வரலாற்றில் அதிகமான முறை கோப்பையை வென்ற கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி கேப்டன் பதவியை ராஜிநாமா செய்த பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக பதவி ஏற்றார். 

அடுத்து வரவிருக்கும் இந்தியா இங்கிலாந்து கடைசி டெஸ்ட் விளையாட உள்ளது. இந்நிலையில் அவரைப் பற்றி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியதாவது:

ரோகித் வீரர்களின் மனநிலைய புரிந்து அதற்கேற்ப அறிவுரை வழங்குவார்.  எப்போதல்லாம் பவுலர்களுக்கு கடினமான சூழ்நிலை வருகிறதோ அப்போதெல்லாம் அவர் நுணுக்கங்களை சொல்லித் தருவார். அவருடைய தலைமையில் விளையாட இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு அதிக நேரமிருப்பதால் எனது உடல்நலம் மற்றும் பவுலிங்கில் பயிற்சி எடுத்து வருகிறேன். டி-20யிலிருந்து டெஸ்டுக்கு மாறுவது கடினமானது. கன்சிஸ்டன்சியாக பந்து வீச பயிற்சி எடுத்து வருகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT