கோப்புப் படம் 
செய்திகள்

டிம் பெயின் இந்தியா வராமலிருந்தால் நல்லது: அஸ்வின் 

இந்திய வீரர் ரவி அஸ்வின் ஆஸ்திரேலிய கேப்டன் விக்கெட் கீப்பருமான டிம் பெயினியும் 2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் பேசிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. 

DIN

இந்திய வீரர் ரவி அஸ்வின் ஆஸ்திரேலிய கேப்டன் விக்கெட் கீப்பருமான டிம் பெயினியும் 2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் பேசிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. 

ரவி அஸ்வின் இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர். ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 5 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். 2021 பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. 

அந்தப் போடியின் போது டிம் பெயின் இந்திய வீரர்களை தொடந்து ஸ்லெட்ஜிங் செய்து வந்தார். அப்போது, “கப்பாவில் விளையாட காத்திருக்கிறேன் அஸ்வின்” என டிம் பெயின் கூறியதற்கு மறுமொழியாக அஸ்வின், “உன்னை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்” எனக் கூறினார். 

“நான் ஏன் அப்படி கூறினேன் என விஹாரிக்கு தெரியும். நாங்கள் தொடர்ந்து டிம் பெயினியின் பேட்டிங் குறித்து பேசிக்கொண்டு இருப்போம். ஷாட்லெக் பொஸிசனில் வித்தியாசமான ஃபீல்டிங் செய்தோம். நான் ,விஹாரி, ரஹானே  மூவரும் இதைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். புஜாரா பொதுவாக லெஹ்சிலிப்பில் ஹெல்மெட் போடாமல் நிற்பார். அவரை எங்கையாவது மாற்றி விட்டு டிம் பெய்னிக்கு ஒரு ஃபீல்டை வைக்க வேண்டும். 

நாங்கள் எதிர்பார்தத மாதிரியே வித்தியாசமான ஃபீல்ட் செட்டப்பில் டிம் பெயின்  கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நாங்கள் கொண்டாடினோம். அப்போது விஹாரியிடம், ‘இவர் இந்தியா வராமலிருந்தால் நல்லது. அப்படி வந்தால் அதே இடத்தில் ஃபீல்டிங் வைப்போம்’. இதெல்லாம் விளையாட்டின்போது நடப்பது தானே” என இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின் குறித்த ஆவணப்பட டிரைலர் வெளியீட்டில் ரவி அஸ்வின் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT