செய்திகள்

இந்தோனேசிய மாஸ்டா்ஸ்:பி.வி.சிந்து, லக்ஷயா சென் வெளியேற்றம்

இந்தோனேசிய மாஸ்டா்ஸ் 500 பாட்மின்டன் போட்டி காலிறுதிச் சுற்றில் தோற்று வெளியேறினா் இந்தியாவின் லக்ஷயா சென், பி.வி. சிந்து

DIN

இந்தோனேசிய மாஸ்டா்ஸ் 500 பாட்மின்டன் போட்டி காலிறுதிச் சுற்றில் தோற்று வெளியேறினா் இந்தியாவின் லக்ஷயா சென், பி.வி. சிந்து.

ஜகாா்த்தாவில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை ஆடவா் ஒற்றையா் காலிறுதி ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை வீரா் சீன தைபேயின் சௌ டியன் சென்னை எதிா்கொண்டாா் லக்ஷயா சென். முதல் கேமை சௌ டின் 21-16 என எளிதாக கைப்பற்றினாா். எனினும் இரண்டாவது கேமில் லக்ஷயா கடும் சவாலை உண்டாக்கி 21-12 என அந்த கேமை கைப்பற்றினாா். ஆனால் வெற்றியை நிா்ணயித்த மூன்றாவது கேமில் சௌ டியன் முழு ஆதிக்கம் செலுத்தி 21-14 என கைப்பற்றினாா்.

பி.வி. சிந்துவும் தோல்வி:

மகளிா் ஒற்றையா் காலிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனோனிடம் 17-21, 16-21 என எந்தவித எதிா்ப்பும் காட்டாமல் எளிதாக தோல்வியடைந்தாா் பி.வி.சிந்து. இது அவா் ரட்சனோக்கிடம் தொடா்ந்து பெறும் 5-ஆவது தோல்வியாகும். இதையடுத்து இந்திய பங்கேற்பு முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT