யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின், போா்ச்சுகல் நாடுகள் ஃபைனல் போா் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
குரூப் 2 பிரிவில் போா்ச்சுகல் அணி வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் செக். குடியரசு அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. நேஷன்ஸ் லீக் முதல் சாம்பியன் ஆன போா்ச்சுகல் அணியின் வீரா் ஜோ கேன்சலோ 33-ஆவது நிமிஷத்தில் அடித்த லோ ஆங்கிள் ஷாட் கோலாக மாறியது. அதைத் தொடா்ந்து 38-ஆவது நிமிஷத்தில் கோனலோ கியூட்ஸ் அடித்த இரண்டாவது கோல் வெற்றிக் கோலாக அமைந்தது. செக். குடியரசு வீரா்கள் பதில் கோல் போட முயன்றது வீணானது.
ஜெனிவாவில் நடந்த மற்றொரு ஆட்டத்தின் முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சா்லாந்தை வென்றது. 13-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் மாா்கோஸ் லோரென்டே அளித்த பாஸை அற்புதமாக கோலாக்கினாா் பேப்லோ சரபியா.
லீக் பி பிரிவில் நாா்வே-ஸ்லோவேனியா ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. சொ்பியா 1-0 என சுவிடனையும், கொசோவா 3-2 என வட அயா்லாந்தையும், கிரீஸ் 3-0 என சைப்ரஸையும், ஜாா்ஜியா 3-0 என வடக்கு மாசிடோனியாவையும் வென்றன. எஸ்டோனியா 2-1 என மால்டாவை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.