செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் ஏராளமான ரன்களைக் குவித்து வரும் பாகிஸ்தான் கேப்டன்

கடந்த 6 ஒருநாள் இன்னிங்ஸில் 4 சதங்களும் 2 அரை சதங்களும் எடுத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

DIN

கடந்த 6 ஒருநாள் இன்னிங்ஸில் 4 சதங்களும் 2 அரை சதங்களும் எடுத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி. முல்தானில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 72 ரன்களும் கேப்டன் பாபர் ஆஸம் 77 ரன்களும் எடுத்தார்கள். அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 32.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புரூக்ஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். முகமது நவாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், ஒருநாள் கிரிக்கெட்டில் சமீபகாலமாக ஏராளமான ரன்களைக் குவித்து வருகிறார். கடந்த 6 ஒருநாள் இன்னிங்ஸில் 4 சதங்களும் 2 அரை சதங்களும் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 88 ஆட்டங்களில் விளையாடி 17 சதங்கள், 19 அரை சதங்களுடன் 4441 ரன்கள் எடுத்துள்ளார் பாபர் ஆஸம். 

கடந்த 6 ஒருநாள் இன்னிங்ஸில் பாபர் ஆஸம்

158(139)
57(72)
114(83)
105*(115)
103(107)
77(93)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT