ரூட் - ஃபோக்ஸ் 
செய்திகள்

நியூசி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: 539 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 539 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 539 ரன்கள் எடுத்துள்ளது.

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 145.3 ஓவர்களில் 553 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 190, டாம் பிளண்டல் 106 ரன்கள் எடுத்தார்கள். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 3-ம் நாள் முடிவில், 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்தது. ரூட் 163, ஃபோக்ஸ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். போப் 145 ரன்கள் எடுத்தார். 

இரட்டைச் சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், இன்று போல்ட் பந்தில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 128.2 ஓவர்களில் 539 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 14 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியூசி. அணியின் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT