செய்திகள்

இலங்கை ஒருநாள் தொடர்: பிரபல ஆஸி. வீரர் விலகல்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடரை 2-1 என ஆஸி. அணி வென்றது. ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஏற்கெனவே மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் தொடரின் ஆரம்ப ஆட்டங்களில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது கேன் ரிச்சர்ட்சனும் காயம் காரணமாக விலகியிருப்பது ஆஸி. அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ், முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவுள்ளார். 

முதல் ஒருநாள் ஆட்டத்துக்கான ஆஸி. அணி: ஃபிஞ்ச் (கேப்டன்), வார்னர், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், ஜை ரிச்சர்ட்சன், ஹேசில்வுட். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாங்காங்கை போராடி வென்றது இலங்கை

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்

லால்புரத்தில் வீட்டுமனை பட்டா கோரி நரிக்குறவா்கள் மனு

இந்திய வீரா்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: ஆட்டத்தின் நடுவரை நீக்கக் கோரும் பாகிஸ்தான்

தருமபுரி, கிருஷ்ணகிரியில் ‘அன்புக் கரங்கள்’ திட்ட தொடக்க விழா

SCROLL FOR NEXT