செய்திகள்

சச்சினுக்கு அடுத்ததாக இவர் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன்: கவாஸ்கர்

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட்டில்...

DIN

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன் என முன்னாள் வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர் கூறியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்க அணி, கட்டாக்கில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 34, ஷ்ரேயஸ் ஐயர் 40, தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்க அணி, 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் பவுமா 35 ரன்களும் கிளாசென் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 81 ரன்களும் எடுத்தார்கள்.

இந்நிலையில் இந்திய டி20 அணியில் உம்ரான் மாலிக் இடம்பெறவேண்டும் என முன்னாள் வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

அடுத்த டி20 ஆட்டத்தில் உம்ரான் மாலிக் இடம்பெற வேண்டும். ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை நான் ஆர்வத்துடன் பார்த்தது என்றால் சச்சின் டெண்டுல்கர் தான். அடுத்ததாக அதுபோல நான் பார்க்க விரும்புவது, உம்ரான் மாலிக்கை. இதுகுறித்து இந்திய அணி தான் முடிவெடுக்க வேண்டும். அதற்குரிய நேரம் வரவேண்டும் என அவர்கள் நினைக்கலாம். அல்லது ஆடுகளத்தை வைத்து முடிவெடுப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்ற உம்ரான் மாலிக், 14 ஆட்டங்களில் விளையாடி 22 விக்கெட்டுகளை எடுத்தார். எகானமி - 9.03.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.80 லட்சம் பறிமுதல்

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமலானால் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நீங்கும்: அமைச்சா் சக்கரபாணி

கிரிவல பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

மாணவா்களின் படைப்பாற்றலை வளா்ப்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

திமுகவிற்கு எதிராக ஓா் அணியில் நின்று நல்லாட்சி அமைப்பதே இன்றைய தேவை: கே.பி. ராமலிங்கம் அழைப்பு

SCROLL FOR NEXT