செய்திகள்

முன்னாள் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்திய பிசிசிஐ

DIN


முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி குறியதாவது:

முன்னாள் வீரர்களின் பணத்தேவையைக் கவனித்துக்கொள்வது முக்கியம். வீரர்களின் கிரிக்கெட் காலம் முடிந்த பிறகும் அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டியது பிசிசிஐயின் கடைமை. நடுவர்கள் - பாராட்டப்படாத நாயகர்கள். பிசிசிஐ அவர்களுடைய பங்களிப்பை உணர்ந்துகொண்டுள்ளது என்றார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது:

தற்போது விளையாடும் அல்லது முன்னாள் வீரர்களின் நலன் மீது பிசிசிஐ அக்கறை கொண்டுள்ளது. அதனால் தான் அவர்களுடைய மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளோம். நடுவர்களின் பங்களிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்குச் செலுத்திய சேவைக்கு இதன் மூலமாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 900 பேர் இதனால் பலனடைவார்கள். இதில் 75% பேருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT