செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 180 ரன்கள் இலக்கு

DIN

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

துவக்க முதலே ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டத் துவங்கினார். பந்துகளை நான்கு புறமும் சிதறடித்த ருத்துராஜ் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். சர்வதேச போட்டிகளில் இது அவரது முதல் அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் காரணமாக 10 ஓவர்களில் இந்திய அணி குவித்தது. கேசவ் மகாராஜ் வீசிய 10வது ஓவர் இறுதி பந்தில் ருத்துராஜ் அவரிடமே கேட்ச் கொடுத்து சதம் அடிப்பார் என்ற இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கினார்.

தன் பங்குக்கு அரை சதம் அடித்த இஷான் கிஷன் 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த போது டுவைன் பிரெட்டோரியஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க , 16 ஓவர்களில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தி இந்திய அணி தடுமாறியது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அக்சர் படேல் 5 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 31 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 179 ரன்களை எடுத்தது. 

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டுவைன் பிரெட்டோரியஸ் 2 விக்கெட்டுகளையும் டப்ரைஸ் ஷாம்சி, கேசவ் மஹாராஜ், ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த நிலையில் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கவுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT