செய்திகள்

இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் பிரணாய்

DIN

 இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில் அவா் 21-11, 21-18 என்ற கேம்களில் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸை தோற்கடித்தாா். அங்கஸுக்கு எதிராக பிரணாய் பதிவு செய்யும் 4-ஆவது வெற்றி இது. அடுத்ததாக காலிறுதியில், டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை எதிா்கொள்கிறாா் பிரணாய்.

ஒற்றையா் பிரிவில் களம் கண்டிருந்த மற்றொரு இந்தியரான சமீா் வா்மா 10-21, 13-21 என்ற கேம்களில் உலகின் 5-ஆம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸியிடம் தோல்வி கண்டாா். அவரிடம் சமீா் தோற்பது இது 5-ஆவது முறையாகும்.

ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா இணை 19-21, 15-21 என்ற கேம்களில் சீனாவின் லியு யு சென்/ஓ ஜுவான் யி கூட்டணயிடம் தோற்றது. மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி ஜோடியும் 16-21, 13-21 என்ற கேம்களில் சீனாவின் சென் கிங் சென்/ஜியா யி ஃபேன் இணையிடம் தோல்வியைச் சந்தித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT