செய்திகள்

அசலன்காவின் முதல் சதம்: ஆஸ்திரேலியாவிற்கு 259 ரன்கள் இலக்கு 

DIN

இலங்கை ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 258 ரன்களை எடுத்துள்ளது. 

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பெரிதாக ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்தனர். நடுவரிசை ஆட்டக்காரர்களான தனஞ்செயா டி செல்வா மற்றும் அசலன்கா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தனஞ்செயா 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக ஆடிய அசலன்கா தனது முதல் சதத்தினைப் பதிவு செய்தார். 106 பந்துகளில் 110 ரன்களை எடுத்த இவர் பாட் கம்மின்ஸ் ஓவரில் 47.4வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். 

ஆஸ்திரேலியாவின் சார்பில் மேத்திவ் குன்மேன், மிட்செல் மார்ஸ், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். மேக்ஸ்வேல் 1 விக்கெட்டை எடுத்தார். மேலும் 3 ரன் அவுட்களை செய்து ஆஸ்திரேலிய வீரர்கள் அசத்தினர். 

49 ஓவர் முடிவில் இலங்கை அணி 258 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டையும் இழந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT