ரோஹித் சர்மா - கோலி (கோப்புப் படம்) 
செய்திகள்

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: முதல் நாள் ஹைலைட்ஸ் விடியோ

விக்கெட் கீப்பர் பேட்டர் பரத் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும் உமேஷ் யாதவ் 23 ரன்களும் எடுத்து இந்திய அணிக்குக் கெளரவமான ஸ்கோரை வழங்கினார்கள்.

DIN

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. 

டெஸ்டுக்கு முன்பு லீசெஸ்டர் நகரில் இந்தியா - லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணியைச் சேர்ந்த பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரிஷப் பந்த், புஜாரா என நான்கு இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணியில் இடம்பெற்றார்கள். 

இந்திய அணி பேட்டர் பலரும் அதிக ரன்கள் எடுக்காத நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டர் பரத் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும் உமேஷ் யாதவ் 23 ரன்களும் எடுத்து இந்திய அணிக்குக் கெளரவமான ஸ்கோரை வழங்கினார்கள். கோலி 33 ரன்களும் கேப்டன் ரோஹித் சர்மா 25 ரன்களும் எடுத்தார்கள். முதல் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ரோமன் வாக்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

SCROLL FOR NEXT