செய்திகள்

அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா: ஹைலைட்ஸ் விடியோ

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

DIN

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

அயர்லாந்துக்கு எதிரான இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. டப்லினில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 12  ஓவர்கள் வழங்கப்பட்டன. டாஸ் வென்ற பாண்டியா தலைமையிலான இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. உம்ரான் மாலிக் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

அயர்லாந்து அணி, 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. ஹேரி டெக்டர் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உம்ரான் மாலிக் ஒரு ஓவர் வீசி 14 ரன்கள் கொடுத்தார். இந்திய அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாகப் பந்துவீசிய சஹால், ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

2-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

கற்பனைகள் கவிபாடும்... சனம் ஜோஷி

SCROLL FOR NEXT