செய்திகள்

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடராஜன்

DIN

நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவுக்குத் தன்னை அழைத்ததற்காகத் தமிழக முதல்வருக்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான நான் முதல்வன் என்கிற திட்டத்தைத் தனது பிறந்த நாளன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதனை ஊக்குவிப்பதாகும். இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் நடராஜனும் கலந்துகொண்டார். 

இந்நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்டது பற்றி நடராஜன், இன்ஸ்டகிராமில் கூறியதாவது:

மாணவர்களுக்கான இந்த அற்புதமான திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதல்வன் - மாணவர்கள் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன் என்று கூறி முதல்வருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT