செய்திகள்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் டிரா: சதமடித்த பாக். தொடக்க வீரர்கள்

DIN


ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவரும் சதமடித்து அசத்தினார்கள்.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்று தொடங்கியது. ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்று தொடங்குகிறது. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. இதற்கு முன்பு, இரு அணிகளும் இதுவரை 25 டெஸ்டுகளில் மோதியுள்ளன. ஆஸ்திரேலியா 13 டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் 7 டெஸ்டுகளிலும் வென்றுள்ளன. 1998-ல் பாகிஸ்தானுக்கு வந்த மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸி. அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடருக்கு பெனாட் - காதிர் கோப்பை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 162 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 140.1 ஓவர்களில் 459 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து இன்று 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி, 77 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனது. பாகிஸ்தானின் அப்துல்லா ஷஃபிக் 136 ரன்களும் இமாம் உல் ஹக் 111 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆட்ட நாயகனாக இமாம் உல் ஹக் தேர்வானார். 

2-வது டெஸ்ட் மார்ச் 12 அன்று கராச்சியில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT