செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி விளையாட மாட்டேன்: ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் அறிவிப்பு

35 வயது ஃபிஞ்ச், ஆஸ்திரேலிய அணிக்காக 5 டெஸ்ட், 132 ஒருநாள், 88 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் இனிமேல் விளையாடப் போவதில்லை என்று ஆஸி. ஒருநாள், டி20 அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.

35 வயது ஃபிஞ்ச், ஆஸ்திரேலிய அணிக்காக 5 டெஸ்ட், 132 ஒருநாள், 88 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஃபிஞ்ச், அந்த வருடத்துக்குப் பிறகு எந்தவொரு டெஸ்டிலும் விளையாடவில்லை. எனினும் ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ளார். ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி, கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. 

இந்நிலையில் முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் இனி விளையாடப் போவதில்லை என ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் இனி நான் விளையாட மாட்டேன் என நினைக்கிறேன். அதில் ஓர் அர்த்தமும் இல்லை. இனிமேல் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. உள்ளூர் அணியில் ஏராளமான இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களுடைய இடத்தைப் பறிக்க விரும்பவில்லை. எனக்கு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாட மிகவும் பிடிக்கும். ஆனால் இதுதான் யதார்த்தம். டெஸ்ட் அணியில் இடம்பெற முயற்சி செய்யாதபோது முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதில் அர்த்தமில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT