செய்திகள்

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, கடலூர் அணிகள்

DIN

கோவில்பட்டி: தூத்துக்குடிமாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறும் மாநில அளவிலான 17-ஆவது ஆண்டு ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி, சென்னை, கடலூர், மதுரை அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. 

கிருஷ்ணா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் முதலில் சென்னை தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி அணி - சேலம் சங்ககிரி ஹாக்கி கிளப் அணியை டைபிரேக்கர் முறையில் (6 - 4) வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 

தொடர்ந்து, கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஹாக்கி அணி 3 - 2 என்ற கோல் கணக்கி திண்டுக்கல் பாண்டியாஸ் ஹாக்கி அணியையும், கடலூர் ஜெம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஹாக்கி அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் சிவகங்கை யங்சேலஞ்சர்ஸ் ஹாக்கி அணியையும் தோற்கடித்தன. கடைசி ஆட்டத்தில் மதுரை தென்னக போலீஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி யுனைடெட் ஹாக்கி கிளப் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT