செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 'த்ரில்' வெற்றி

DIN


மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணியால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியவில்லை.

மேடி க்ரீன் மட்டும் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்தார். 48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

204 ரன்கள் என்ற வெற்றியுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஹீத்தர் நைட் மற்றும் நடாலியா சிவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிவர் அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்தார். 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து 196 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், டீன் மற்றும் ஷ்ரப்சோல் பொறுப்புடன் விளையாடி இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தனர். 47.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 204 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து அணி தக்கவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT