வெற்றி பெற்ற மே.இ. தீவுகள் அணி 
செய்திகள்

இங்கிலாந்தை 3-வது டெஸ்டில் வீழ்த்தி தொடரை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது.

கிரனடாவில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.4 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தது. மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 116.3 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடி 64.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற 28 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது மே.இ. தீவுகள் அணி. ஆட்ட நாயகனாக ஜோஷுவா ட சில்வாவும் தொடர் நாயகனாக கேப்டன் கிரைக் பிராத்வெயிட்டும் தேர்வானார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... கனிகா!

இலங்கையில் மேலும் 2 முக்கிய அரசியல் தலைவர்கள் கைது!

உ.பி.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !

கேப்டன் ஹாட்ரிக்: ஆசிய கோப்பையில் வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

கேம்ரி ஸ்பிரின்ட்.. டொயோட்டாவின் புதிய அறிமுகம்!

SCROLL FOR NEXT