மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி: ஆஸி.யின் வலுவான ஸ்கோரை விரட்டத் தடுமாறும் மே.இ. தீவுகள் அணி
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.
செய்திகள்மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி: ஆஸி.யின் வலுவான ஸ்கோரை விரட்டத் தடுமாறும் மே.இ. தீவுகள் அணி
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.
வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. மழை காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஆஸி. தொடக்க வீராங்கனைகள் ரேச்சர் ஹெய்ன்ஸும் அலிஸா ஹீலியும் முதல் விக்கெட்டுக்கு 32.4 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தார்கள். அலிஸா ஹீலி 107 பந்துகளில் 1 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருடைய 4-வது ஒருநாள் சதமாகும்.
கடினமாக இலக்கை விரட்ட சிரமப்பட்டு வருகிறது மே.இ. தீவுகள் அணி. 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 15 ஓவர்களில் 180 ரன்கள் தேவைப்படுவதால் ஆஸி. அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.