செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இங்கிலாந்து

DIN

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டேனி 125 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். சோபியா 60 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்துள்ளது. தெ..ஆ.வின் ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி இன்று மோசமாக விளையாடியது. ஒருவராலும் 30 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாத அளவுக்கு இங்கிலாந்து அணி அபாரமாகப் பந்துவீசியது. கடைசியில் தெ.ஆ. அணி 38 ஓவர்களில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டு பிரீஸ் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் 22 வயது சோபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 137 ரன்கள் வித்தியாசத்தில் அரையிறுதியை வென்ற இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. மூன்று தோல்விகளுடன் போட்டியைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் 6-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.

ஏப்ரல் 3 அன்று கிறைஸ்ட்சர்ச்சில் இறுதிச்சுற்று நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

SCROLL FOR NEXT