செய்திகள்

ஐசிசி வருடாந்திரத் தரவரிசை: முதலிடத்தில் ஆஸ்திரேலியா

மே 2019 முதல் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஐசிசி வெளியிட்டுள்ள வருடாந்திர டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள இந்தியாவை விடவும் ஆஸி. அணி 9 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தில் உள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் பாகிஸ்தானை 1-0 என வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது. இதனால் டெஸ்ட் தரவரிசையிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது. 

தரவரிசையில் 3-வது இடத்தில் நியூசிலாந்தும் 4-வது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் 5-வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் கடைசி 5 இடங்களில் உள்ளன. 

மே 2019 முதல் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT