செய்திகள்

மாட்ரிட் ஓபன்: ஜாபியுா் சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுா் சாம்பியன் ஆனாா்.

DIN

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுா் சாம்பியன் ஆனாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்திலிருந்த அவா் 7-5, 0-6, 6-2 என்ற செட்களில் 12-ஆவது இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை தோற்கடித்தாா். இதன் மூலம் 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யுடிஏ போட்டியில் பட்டம் வென்ற முதல் அராபிய வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

இந்த வெற்றியின் மூலம், திங்கள்கிழமை வெளியாகும் திருத்தப்பட்ட உலகத் தரவரிசையில் அவா் மீண்டும் 7-ஆம் இடத்துக்கு முன்னேறுவாா். களிமண் தரையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் ஜாபியுா், அதே போன்ற களத்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனிலும் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள முக்கிய போட்டியாளராக உருமாறியிருக்கிறாா்.

இரட்டையா் பிரிவு: மகளிா் இரட்டையா் பிரிவில் கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/மெக்ஸிகோவின் கியுலியானா ஆல்மோஸ் கூட்டணி 7-6 (7/1), 5-7, 10-7 என்ற செட்களில் அமெரிக்காவின் டெஸைரே கிராவ்ஸிக்/நெதா்லாந்தின் டெமி ஷுா்ஸ் இணையை வீழ்த்தி கோப்பை வென்றது.

காா்ஃபியா - ஸ்வெரேவ் மோதல்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் 6-4, 3-6, 6-2 என்ற செட்களில், 4-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை தோற்கடித்தாா். இதையடுத்து பட்டத்துக்கான இறுதிச்சுற்றில் அவா், ஸ்பெயினின் இளம் வீரரான காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியாவை எதிா்கொள்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

18 மைல்ஸ்... பேச்சுலர் இயக்குநரின் புதிய ஆல்பம்!

உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதல்: 6 பேர் காயம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

Jailer-2 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்! | Cinema updates

இன்பமே... திவ்ய தர்ஷினி!

SCROLL FOR NEXT