படம்: ட்விட்டர் | ஹாக்கி இந்தியா 
செய்திகள்

ஆசியக் கோப்பை ஹாக்கி: இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்தியா

ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் கொரியாவுக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

DIN


ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் கொரியாவுக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் சூப்பர் 4 பிரிவில் கொரியா மற்றும் மலேசியா கோல் கணக்கில் முன்னிலையில் இருந்ததால், இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணி கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த ஆட்டத்தில் கடைசி விசில் வரை இந்திய வீரர்கள் கடுமையானப் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய அணிக்காக நிலாம் சஞ்சீப் 9-வது நிமிடத்திலும், மனிந்தர் சிங் 21-வது நிமிடத்திலும், ஷேஷே கௌடா 37-வது நிமிடத்திலும், மாரீஸ்வரன் சக்திவேல் 37-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கொரியா அணி 13, 18, 28 மற்றும் 44 ஆகிய நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தது.

4-4 என்ற கோல் கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் இருக்க, கடைசி நேரத்தில் கோல் அடிப்பதற்கு இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. வட்டத்துக்கு உள் இருந்து உத்தம் சிங்குக்கு பந்தை அனுப்பினார் பவன் ராஜ்பர். ஆனால், இந்திய வீரர்களால் அதைக் கையாள முடியவில்லை.

இறுதியில் ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. எனினும், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நாளை (புதன்கிழமை) ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் கடும் வெள்ளம்! தென்னை மரத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவம்!

வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

விடியோவால் வந்த வினை! ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்ணை கண்டுபிடித்த ரயில்வே!

டிட்வா புயல்: பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்!

கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT