செய்திகள்

தினேஷ் கார்த்திக்குக்கு இனிமேல் இந்திய அணியில் இடமுண்டா?: சேதன் சர்மா பதில்

டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா.

DIN


நியூசிலாந்து டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா.

நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. இதுபற்றி பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா கூறியதாவது:

தினேஷ் கார்த்திக்கைத் தேர்வு செய்யாததால் நாங்கள் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் வேறு வீரர்களை உருவாக்குகிறோம் என்று அர்த்தமில்லை. உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்று வருகிறது. பணிச் சுமையைக் கருத்தில் கொள்கிறோம். யாருக்கு ஓய்வளிக்க வேண்டும், யாரை விளையாட வைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். அணிக்குத் தேர்வாகி விளையாடியதை வைத்துப் பார்க்கும்போது தினேஷ் கார்த்திக் எப்போதும் தேர்வு செய்வதற்கான வீரராகவே உள்ளார். ஆனால் டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் டி20 தொடர் தொடங்குவதால் வேறு வீரர்களை முயற்சி செய்து பார்க்கிறோம். மற்றபடி அவருக்கான கதவு திறந்திருக்கிறது. அவர் அற்புதமான வீரர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT