செய்திகள்

வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாடவுள்ள சுரேஷ் ரெய்னா!

இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

DIN

இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

2022 அபுதாபி டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் டெக்கன் கிளாடியேட்டர்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் ரெய்னா முதல்முறையாகப் பங்கேற்கிறார். டெக்கன் கிளாடியேட்டர்ஸ் அணியில் ரஸ்ஸல், நிகோலஸ் பூரன் போன்ற வீரர்களும் உள்ளார்கள். நவம்பர் 23 முதல் அபு தாபியில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 8 அணிகள் கலந்துகொள்ளும் போட்டியின் இறுதிச்சுற்று டிசம்பர் 4 அன்று நடைபெறவுள்ளது. 2017 முதல் டி10 லீக் போட்டி நடைபெற்று வருகிறது. 

2020-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரெய்னா ஓய்வு பெற்றார். இந்த வருடம் ஐபிஎல் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடும் தகுதியை அடைந்தார். 2021-ல் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றபோது அந்த அணியில் ரெய்னாவும் இடம்பெற்றிருந்தார். 

35 வயது ரெய்னா, 2005 முதல் 2018 வரை இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 205 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலான ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

கியா காா்கள் விற்பனை 8% உயா்வு

மின்சாரம் பாய்ந்து இரு பசுக்கள் உயிரிழப்பு: சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT