செய்திகள்

இந்தியாவுக்கு நெருக்கடி: 21 பந்துகளில் அரை சதமெடுத்த லிடன் தாஸ்!

DIN

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் வங்கதேச அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடிலெய்டில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பெற்றுள்ளார். 

இந்திய அணி  20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 64, ராகுல் 50 ரன்கள் எடுத்தார்கள். 

வங்கதேச அணி பவர்பிளேயில் அற்புதமாக விளையாடியுள்ளது. லிடன் தாஸ் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். 21 பந்துகளில் அரை சதமெடுத்து அசத்தினார். பவர்பிளேயில் 3 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடித்தார் லிடன் தாஸ். இதனால் முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேசம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT