முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: ஆஸி. அணிக்குப் புதிய கேப்டன், பிரபல வீரர் நீக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் ஆஸி. அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச்
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் ஆஸி. அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச், டேவிட் ஆகியோர் இடம்பெறவில்லை. ஸ்டார்க் நீக்கப்பட்டுள்ளார். மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸி. அணியில் கிரீன், ஸ்மித், ரிச்சர்ட்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

குரூப் 1 பிரிவில் 5 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பு உருவாகும். 

ஆப்கானிஸ்தானை 185 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம் பிடிக்கலாம். இலங்கைக்கு எதிராக சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி, 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 2-ம் இடத்தைப் பிடிக்கலாம். அல்லது இன்று ஆஸ்திரேலியாவும் நாளை இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கையும் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடும். 

முழு கட்டுரையைப் படிக்க →